Advertisment

இரை தேடி சாலைக்கு வந்த அனகோண்டா: வைரலாகும் வீடியோ

30 கிலோ எடையும் கொண்ட ராட்சத அனகோண்டா பாம்பு கடந்து சென்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Traffic halts as giant anaconda crosses road in Brazil, viral video

Traffic halts as giant anaconda crosses road in Brazil, viral video

பிரேசில் நாட்டின் நகர சாலையில், உண்ண உணவு தேடி வந்த ராட்சத அனேகாண்டாவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையை கடக்கும் அனகோண்டாவின் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிரேசில் நாட்டின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் போர்டோ வெல்ஹோ. இந்நகர சாலையில், 3 மீட்டர் நீளமும், தோராயமாக 30 கிலோ எடையும் கொண்ட ராட்சத அனகோண்டா பாம்பு கடந்து சென்ற சம்பவம், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, பெரும்பரபரப்பையும் ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையல்ல.

அனகோண்டா பாம்பு சாலையின் சென்டர்மீடியனில் ஏறி, மற்றொரு பக்கத்திற்கு செல்லும்போது, அவ்வழியே காரில் சென்ற மக்கள் அதை வீடியோ எடுத்ததோடு விடாமல், அது இடையூறு இல்லாமல் சாலையை கடக்கும் பொருட்டு, அவர்களாகவே முன்வந்து விரைந்து வரும் கார்களை தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக, பிரேசில் உயிரியல் அறிஞர் பிளேவியோ டெராசினி, செய்தி இைணயதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்த அனகோண்டா பாம்பு, உண்ண இரை தேடி சாலைக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, நகர பகுதிகளில், இதுபோன்ற அனகோண்டா பாம்புகள் சமீபகாலமாக அதிகளவில் தென்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் உள்ளிட்டவைகளை இவை உணவாக உட்கொள்கின்றன.

குப்பைகள் அதிகம் குவிந்து கிடக்கின்ற பகுதிகளை கவனமுடன் கடக்க வேண்டும், ஏனென்றால் அங்குதான் இவை பதுங்கியிருக்கும். நாய், பூனை உள்ளிட்டவைகளின் வாசனைகளை நுகர்ந்து, அவை வீட்டின் அருகிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டொரசினி கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment