Advertisment

பறக்கும் மீன், நடக்கும் மீன்... இனி என்னவெல்லாம் இருக்குது இந்த உலகத்துல - ட்ரெண்டாகும் சூப்பர் வீடியோ

கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

author-image
WebDesk
New Update
Rate Hand walking fish

Rare hand walking fish found after 22 years in Tasmanian Coast

Trending news in Tamil rare walking fish spotted : மிக சமீபத்தில் கடலின் அடி ஆழத்தில் தலை மட்டும் மிகவும் ட்ரான்ஸ்பெரன்ண்டாக இருக்கும் மீனின் வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அதே வகையில் ஆச்சரியம் தரும் நடக்கும் இளஞ்சிவப்பு மீனின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

சிஸ்ரோ எனப்படும் Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் 1999ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் இளஞ்சிவப்பு மீன் தஸ்மானியன் பகுதியில் பார்வையில் தென்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அதாவது 22 ஆண்டுகளாக இந்த மீன்கள் என்ன ஆனது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

இது தாங்க டைனோசர் குட்டி; உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய யிங்லியாங் முட்டை

கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மீன் ஆங்க்லெர் மீன் குடும்பத்தை சேர்ந்தது. அழிவின் விளிம்பில் இந்த மீன் வகை இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர்கள் அண்டர்வட்டர் கேமராக்களை தஸ்மான் ஃப்ராக்சர் மெரைன் பார்க்கில் பொருத்தினார்கள். இந்த ஆண்டின் பிற்பாதியில் அந்த கேமராவின் காட்சிகளை பெற்று பார்வையிட்ட போது பிங்க் ஹேண்ட்ஃபிஷ் அதில் பதிவாகியிருந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழமான கடல் பகுதியிலேயே வாழும் என்று நம்பப்பட்ட இந்த மீன் வெறும் 150 ஆடி ஆழத்திலேயே கண்டறியப்பட்டது மேலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய கடல் பகுதியில், நீருக்கு அடியே பூமி ஓட்டில் ஏற்பட்டிருக்கும் பிளவின் காரணமாக அந்த கடல் பூங்காவிற்கு ஃப்ராக்சர் மெரைன் பார்க் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பிளவின் வழியே கடலுக்குள் 4000 மீட்டர் ஆழம் வரை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுகளை மேற்கொள்ள இயலும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment