Advertisment

கேரளாவை புரட்டி போட்ட வெள்ளம்... நின்று போக இருந்த திருமணத்தை நிவாரண முகாமில் நடத்தி வைத்த மக்கள்!

ராபியாவை தங்கள் வீட்டு பெண்ணாக எண்ணி, அவர்கள் நடத்தி வைத்த திருமணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trending news today

trending news today

trending news today : கேரளாவை கடந்த வாரம் புரட்டி போட்ட கடும் மழையால், நின்று போக இருந்த பெண்ணின் திருமணத்தை வெள்ள நிவாரண முகாமில் அனைத்து உதவிகளையும் செய்து பொதுமக்கள் நடத்தி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.’

Advertisment

கடவுளின் தேசமான கேரள மாநிலம் சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது. வயநாடு தொடங்கி கேரளாவின் அனைத்து முக்கிய நகரங்களும் வெள்ளக்காடாகின. அண்டை மாநிலமான கேரளாவை கைக்கொடுத்து மீட்க அனைத்து மாநிலங்களும் முன்வந்தன. அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண பொருட்களையும் பல்வேறு வழிகளில் அனுப்பி அவர்களுக்கு தோள் கொடுத்தனர்.

இந்த மாபெரும் வறட்சியில் இருந்து கேரள மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கியது. மக்களின் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. இந்நிலையில், அதற்குள் மீண்டும் மழை கேரளாவை கடந்த வாரம் வாட்டி வதைத்தது.தென்மேற்கு பருவ மழை அங்கு தீவிரமானதால் தொடர்து மழை பெய்தன. சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

வயநாட்டில் உள்ள பல்வேறு வீடுகளில் முழுங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்து வீடுகளை நாசம் செய்தனர். இதனால் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த சூரல்மலை பகுதியை சேர்ந்த ராபியா என்ற பெண்ணின் திருமணனும் தடைப்பட்டது. திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் திருமணம் நடத்த முடியாத சூழலில் குடும்பத்துடன் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

publive-image

மொத்த குடும்பமும் கண்கலங்கி இருந்த நிலையில், அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அனைத்து உதவிகளையும்  செய்து ராபியாவின் திருமணத்தை வெள்ள நிவாரண முகாமிலே கோலாகலமாக நடத்தி வைத்தனர்.திருமணத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் கறி சோறு விருந்தும் போட்டனர்.

ராபியாவை தங்கள் வீட்டு பெண்ணாக எண்ணி, அவர்கள் நடத்தி வைத்த திருமணம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment