ஸ்டாலின் பதவியேற்பு நாளன்று ஒரு ரூபாய்க்கு சவாரி; மாஸ் காட்டிய ஆட்டோ ஓட்டுநர்

. காளப்பட்டி, காந்தி பார்க், அவிநாசி சாலை, விமான நிலையம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று 75 வாடிக்கையாளர்களை அழைத்து சென்றுள்ளார் அவர்.

Trending viral news Coimbatore Auto Driver Charged Rs 1 per ride

Trending viral news Coimbatore Auto Driver Charged Rs 1 per ride : மே 7ம் தேதி அன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. தடைகளை மீறீயும் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மக்கள்.

இந்நிலையில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த திமுக தொண்டரான மதிவாணன் காலை 9 மணி முதல் மாலை மணி வரை ஒரு ரூபாய்க்கு பயணிகளை சவாரி அழைத்து சென்றுள்ளார். சிங்காநல்லூர் ஜெய்சாந்தி ஆட்டோ நிறுத்தத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் ஆரம்பத்தில் அதிமுக தொண்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட போதும் இதே போன்று பயணிகளிடம் ஒரு ரூபாயை மட்டும் வாடகையாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காளப்பட்டி, காந்தி பார்க், அவிநாசி சாலை, விமான நிலையம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று 75 வாடிக்கையாளர்களை அழைத்து சென்றுள்ளார் அவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral news coimbatore auto driver charged rs 1 per ride

Next Story
இந்தியாவிற்காகவே புதிய பப்ஜி; அறிவிப்பால் குதுகலம் அடைந்த மீம் கிரியேட்டர்கள்PUBG developer announces ‘Battlegrounds Mobile India’, gamers rejoice with memes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com