நல்ல பாம்பை உண்ணும் ராஜநாகம் – வைரலாகும் புகைப்படம்

பசிக்காக ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடும் என்று இதற்கு முன்பு நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

King Cobra, cobra, viral videos, viral photos, snake viral photos,

Trending viral photo of King cobra eating cobra : உலகிலேயே கூடு கட்டி, அடைகாக்கும் பாம்பு வகை ராஜநாகம் மட்டுமே. தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும் போது பெரும்பாலும் கூட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் ராஜநாகங்கள் தங்களின் வழியில் சிக்கும் சிறிய உயிர்களை உண்டு உயிர்வாழும் தன்மை கொண்டதாகும்.

சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடைகாக்கும் ராஜநாகம் ஒன்று அந்த வழியில் வந்த நல்ல பாம்பை உணவாக உட்கொள்ளும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்கவே பிரம்மிப்பூட்டும் அதே வகையில் மிகவும் பயமூட்டும் புகைப்படமாக அது அமைந்துள்ளது.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு, அதன் கீழே ராஜநாகத்தின் பண்புகள் என்ன என்பதையும் அதற்கான அறிவியல் பெயர் எவ்வாறு உருவானது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். Ophiophagus hannah என்பது ராஜநாகத்தின் அறிவியல் பெயராகும். கிரேக்க மொழியில் இந்த பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் Ophiophagus என்றால் பாம்புகளை உண்ணும், hannah என்பது மரத்தில் வாழும் சிறு தெய்வம் என்றும் பொருள்.

1500க்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை லைக் செய்தது மட்டுமின்றி ராஜநாகத்தின் பண்புகள், இந்திய பாம்பு இனங்கள், உணவு முறைகள், விஷத்தின் தன்மை, விஷமுறிவு குறித்தும் தங்களின் சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral photo of king cobra eating cobra

Next Story
கேன்சரால் உயிரிழந்த சிறுமி… கல்நெஞ்சக்கார தந்தையிடம் பணஉதவி கேட்டு கெஞ்சிய விடியோ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com