Advertisment

பறந்து பறந்து நீச்சல்; சுற்றுலாப் பயணிகளை துரத்தி வந்த நீர் யானை - வைரல் வீடியோ

இருவாழ் உயிரினங்களான நீர் யானைகளால் அதன் எடை காரணமாக அதனால் நீச்சல் அடிக்க முடியாது. ஆனால் அது தன் இரைக்கான வேட்டையின் போது "பட்டர்ஃப்ளை ஸ்விம்மிங்” என்ற நீச்சல் யுத்தியை பயன்படுத்தும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hippo chases tourists, hippo chase tourists in water,

Trending Viral video of Hippos swim butterfly stroke : சில விலங்குகள் வசிக்கும் இடத்தை நேரில் சென்று பார்ப்பது என்னவோ நல்ல முயற்சியாக தான் இருக்கும். ஆனால் ஒரு தவறான நிகழ்வு ஏற்படும் வகையில். ஜாம்பியாவில் இப்படியான ஒரு நிகழ்வு ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ப்ராண்டன் ரீட் என்பவர் எடுத்த வீடியோ ஒன்றை லெம்பனி ட்ராவ்லஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் 200 மீட்டர் வரை தன்னையும் தன்னுடைய மனைவியையும் நீர் யானை ஒன்று துரத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டதாக கருதப்படும் நீர் யானைகள் அவ்வாறு கிடையாது. தன்னுடைய எல்லையில் அச்சுறுத்தல்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அது தாக்குதலுக்கு தயாராகிறது.

மேலும் படிக்க : உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்… ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்

படகில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு நீர்யானை குழு ஒன்று சற்று தூரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதனை ரசித்து வருகின்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அங்கே ஒரு நீர் யானை மட்டும் பலம் கொண்டு வேகவேகமாக படகை தாக்க வரும் காட்சிகள் பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இருவாழ் உயிரினங்களான நீர் யானைகளால் அதன் எடை காரணமாக அதனால் நீச்சல் அடிக்க முடியாது. ஆனால் அது தன் இரை தேடி வேட்டைக்காக கிளம்பும் போது மனிதர்கள் கூறும் “பட்டர்ஃப்ளை ஸ்விம்மிங்” என்ற நீச்சல் யுத்தியை பயன்படுத்தி வேட்டையாடும்.

மேலும் படிக்க : நிறம் மாறும் பனிப்பூனைகள்; யூராசியன் லின்க்ஸின் வைரல் வீடியோ

மே 28ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் ஏற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மோரல் ஆஃப் தி ஸ்டோரியை நீங்கள் சொல்ல வேண்டாம். இன்று நாங்களே சொல்லி விடுகின்றோம். வன உயிரினங்களின் எல்லைகளில் அவைகளுக்கு அச்சுறுத்தல் தரும் எந்த விதமான செயல்பாடுகளையும் மேற்கொள்ளாதீர்கள். இல்லையென்றால் இப்படித்தான் ஒரே ரன்னிங் சேஷிங்காக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment