Trending viral video of Pakistani bride wears 100 kg lehenga : அனைத்து பெண்களுக்கும் அவர்களின் கல்யாணத்தின் போது மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பானது தான். அவர்கள் வாழ்வில் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும் என்பதால் அவர்கள் அனைத்தையும் மிகவும் நுணுக்கமாக அதே நேரத்தில் மிகவும் கலைநயமிக்கதாக தேர்வு செய்வார்கள்.
இங்கே தன்னுடைய திருமணத்திற்காக ”வெறும்” 100 கிலோ எடை கொண்ட லெஹாங்கா ஆடையை அணிந்து அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தயாரித்து, இதனை அணிந்து, திருமணம் நடைபெறும் அரங்கிற்கு வருவதை நினைத்து பார்க்கும் போதே தலை சுற்ற துவங்கிவிட்டது. இந்த திருமணம் கடந்த ஆண்டே நடைபெற்ற போதிலும், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அட சோறு மட்டும் தாங்க முக்கியம். மத்ததப்பத்தி நமக்கென்ன கவலைன்னு நீங்க யோசிச்சா நீங்க கிரேட்டுங்க… ஆனால் இந்த வீடியோவை பாத்த எல்லாரும் அப்படி ஒன்னும் நினைக்கல. இந்த ஆடை குறித்தும், இந்த மணப்பெண்ணின் தேர்வு குறித்தும் தங்களின் கருத்தை பகிரங்கமாக பதிவு செய்து வருகின்றனர். நீங்கள் இந்த அடை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil