சானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோ

இந்த அம்மா – பையன் கூட்டணி குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Trending Viral Video of Sania Mirzas 2-year-old son helping her with practice

Trending Viral Video of Sania Mirza : இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் சானியா மிர்ஸா தன் மகனுடன் டென்னிஸ் மைதானத்தில் விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. விளையாடுகிறார் என்றால் ஏதோ கண்ணாமூச்சி என்று நினைத்துவிட வேண்டாம். அம்மாவிற்கு துணையாக டென்னிஸில் உதவி வருகிறார் சானியாவின் இரண்டு வயது மகன் இஷான் மிர்ஸா மாலிக்.

இந்த வீடியோவில், தன்னுடைய அம்மாவிற்கு ஒவ்வொரு முறையும் டென்னிஸ் பந்துகளை கொண்டு வந்து கொடுக்கிறார் இஷான். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சானியாவின் தந்தை இம்ரான் மிஸ்ரா, இந்த குட்டிச்சுட்டி விரைவில் என்னுடைய கோச்சிங் பதவியை பறித்துவிடுவார் என்ற அபாயத்தில் நான் இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை லைக் செய்துள்ளனர். இந்த அம்மா – பையன் கூட்டணி குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of sania mirzas 2 year old son helping her with practice

Next Story
அட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா? கதறும் சி.பி.எஸ்.சி மாணவர்கள்Memes galore on Twitter as students wait for final decision on CBSE Class 12 Board exams
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com