trending viral video of snakes : இந்திய ஐ.எஃப்.எஸ். அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தன்னார்வலர் ஒருவரால் மீட்டெடுக்கப்பட்ட பாம்பு முட்டைகளில் இருந்து, 50 நாட்கள் கழித்து, பாம்புகள் வெளியே வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. அதனை அவர் க்யூட் கோப்ராக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் மிகவும் விசம் கொண்ட நாகங்களில் ஒன்றான மோனக்ளாட் நாகங்கள் (Monocled snakes) ஆகும். 1.4 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த நாகங்களின் இளம் குட்டிகளில் இருக்கும் விசம் வளர்ந்த நாகங்களில் இருக்கும் விசத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும்.
நேற்றிரவு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil