ஹாலிவுட் படமெல்லாம் தள்ளி நிக்கணும்; சுரங்கப் பாதைக்குள் விமானம் ஓட்டிய இத்தாலியர் – வைரல் வீடியோ

லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 13.4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதனை லைக் செய்துள்ளனர்.

viral video, trending viral video, viral videos, online viral videos

trending viral video : ஹாலிவுட் படங்களில் மட்டுமே சாத்தியமான சில விசயங்களை அன்றாட வாழ்வில் சந்திக்கும் மக்கள் செய்யும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஸ்டண்ட் விமானி ஒருவர் சுரங்கப்பாதை ஒன்றில் விமானத்தை ஓட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள இரண்டு சுரங்கப் பாதைக்குள் விமானம் ஓட்டி புதிய சாதனை ஒன்றை புரிந்துள்ளார் விமானி டரியோ கோஸ்டா. இந்த வீடியோவை ஆஸ்திரிய நிறுவனமான ரெட்புல் தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிட தற்போது வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோ. “டரியோ கோஸ்டா, சுரங்கப்பாதையில் விமானம் ஓட்டிய முதல் சாதனை மனிதர்” என்று ட்வீட் வெளியிட்டுள்ளது.

காற்று மிகவும் மோசமாக வீசிய போதும், இந்த விமானத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் டரியோ. முதலில் 360 மீட்டர் சுரங்கப்பாதையை கடந்த அவர் பிறகு 1,160 மீட்டர் நீளமுள்ள சுரங்கபாதையை கடந்து சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவர் வெறும் 43.44 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கும் மேலாக விமானம் ஓட்டி வரும் 41 வயதான கோஸ்டா, சுரங்கபாதைகளில் நீண்ட தூரம் விமானம் ஓட்டிய முதல் விமானி உள்ளிட்ட 4 கின்னஸ் விருதுகளை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 13.4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதனை லைக் செய்துள்ளனர். பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்ததோடு இந்த விமானிக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of stunt pilot flies plane through the tunnels

Next Story
வேகமாக வந்த கார்; இருபுறமும் பார்க்காமல் ஓடி வந்த சிறுவன்… கண் இமைக்கும் நொடி தான்… – த்ரில் வீடியோviral video, trending viral video, car accident
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com