கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய ஆண் நிருபர்; தக்க பதிலடி கொடுத்த செயலாளர் – வைரல் வீடியோ

அது பெண்ணின் உடல். குழந்தை பெற்றுக் கொள்வதை தீர்மானதிப்பதும் மறுப்பதும் அவரின் உரிமை. நீங்கள் கர்ப்பமாக இருந்ததில்லை என்பதால் நீங்கள் அப்படி ஒரு சூழலை எதிர் கொண்டிருக்கமாட்டீர்கள் என்று கூறினார் சகி.

White House Press Secretary Jen Psaki , abortion rights

male reporter asking questions on abortion rights : டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு சர்ச்சையாகியுள்ள நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் ஜென் சகி, கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பாக தேவையற்ற கேள்விகளை எழுப்பிய பத்திரிக்கையாளருக்கு சரியான பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக அதிபர் ஜோ பைடன் செயல்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பிய அந்த பத்திரிக்கையாளர், கத்தோலிக்க நம்பிக்கைகளில் கருக்கலைப்பு என்பது ஒழுக்கமற்ற செயலாக கருதப்படும் போது, அந்த மத நம்பிக்கை கொண்ட ஜோ பைடன் ஏன் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

சகி, பொறுமையாக, அது பெண்ணின் உடல், அவளின் முடிவு. பெண்களின் உரிமைகளை நம்புகிறார் அதனால் ஆதரவு அளிக்கிறார் என்று பதில் கூறினார். அடுத்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் தர முயன்ற சகியிடம் மீண்டும் கேள்விகளை எழுப்பினார் அதே பத்திரிக்கையாளர்.

“பிறக்காத குழந்தையை யார் கவனிக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார் அவர். உடனடியாக பதில் கூறிய சகி, அந்த முடிவுகளை எடுப்பது ஒரு பெண்ணின் பொறுப்பாகும், ஒரு பெண் தன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அந்த முடிவுகளை அவர் எடுக்க வேண்உம் என்று கூறினார்.

அதோடு நின்றுவிடாமல் சகி, நீங்கள் அது போன்ற சவால்களை எதிர்கொண்டதில்லை. மேலும் நீங்கள் இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. அந்த தேர்வுகளை எதிர்கொண்ட பெண்களுக்கு – இது நம்பமுடியாத கடினமான விஷயம். அந்த உரிமையை மதிக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார் என்று கூறிய அவர் மேற்கொண்டு கேள்வி எழுப்பிய அந்த நிருபரின் கேள்விகளை நிராகரித்துவிட்டார் சகி.

பெரும்பாலான கருக்கலைப்புகளை தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட டெக்சாஸ் மாகாணத்தின் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் அது தொடர்பாக வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சகி. . நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்களையும் சலசலப்பையும் ஊக்குவித்ததால் பைடன் அந்த சட்டத்தையும், நீதிமன்றத்தின் செயலற்ற தன்மையையும் கண்டித்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். பலரும் ஜென் சகியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை முழுக்க முழுக்க பெண்களின் விருப்பம் என்பது குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of white house press secretary shuts down male reporter asking questions on abortion rights

Next Story
Trending News உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, 22 கேரட் தங்க “வடப்பாவ்”Golden vadapav, gold, trending news, viral news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com