ஒவ்வொரு ஆண்டும் யானைகளின் இறப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. பல்வேறு காரணங்களின் விளைவாக யானை – மனித மோதல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் விளைவாக யானைகள் மரணிக்கின்றன. அதே போன்று பல்வேறு இயற்கைக் காரணங்களுக்காகவும் யானைகள் உயிரிழக்கின்றன. யானைகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போதுமான உபகரணங்கள் இல்லை என்பதை வனத்துறை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக முன்வைத்த வண்ணமே உள்ளனர்.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியேற எவ்வளவோ முயன்றும் யானைக்கு தோல்வியே மிஞ்சியது. உடல் சோர்வுற்று இருந்த நிலையில் வனத்துறையினர் புல்டோசர் வாகனத்தை கொண்டு வந்து மீட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. காட்டில் அந்த யானை சேற்றில் சிக்கி தவித்த வந்த வீடியோ மற்றும் வனத்துறையினர் அதனை காப்பாற்றும் வீடியோ என இரண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யானை காப்பாற்றப்பட்டதிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் வந்தாலும், மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உடனுக்குடன் யானைகள் மற்றும் பிற வன உயிரிழனங்களை மீட்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil