Advertisment

ஒரு நொடியில் தம்பிக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இணையவாசிகளுக்கும் ஹீரோவான சிறுமி!

கால்களைப் பிடித்துக்கொண்டு, லிஃப்டு பட்டனை கீழ்நோக்கி அழுத்தி, அதன் பிரஷரைக் குறைக்கிறாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
twitter viral video today

twitter viral video today

twitter viral video today : லிஃப்டுக்குள் ஆபத்தில் சிக்கிக் கொண்ட தம்பியின் உயிரை ஒரு கணத்தில் துணிச்சலாக செயல்பட்டு சிறுமி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அக்கா - தம்பி இந்த உறவு அடுத்த அம்மா, மகன் பாசத்திற்கு சமம் என்பார்கள். எத்தனையோ குடும்பங்களில் அம்மா இழந்த தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் அக்கா தான் தாயாக இருப்பாள்.  அவர்களை தாயை போலவே அரவணைப்பாள். அதனால் தான் மற்ற உறவுகளை காட்டிலும் அக்கா- தம்பி, தங்கை உறவு தாய்மைக்கு நிகராக போற்றப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த சிறுவன, இனிமேல் தனது அக்காவை கடவுளாக பார்த்தாலும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தின் அடுக்குமாடி குடியியிருப்பின் லிஃப்டில் அரங்கேறிய இந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வீடியோவின் முடிவு அனைவருக்கும் நிம்மதியை அளித்தது.

லிஃப்டில் குழந்தைகள் ஏறுகிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் கயிற்றை வைத்து விளையாடியவாறே உள்ளே நுழைகிறான். அடுத்த சில நிமிடங்களில் லிஃப்ட் மேலே செல்கிறது. அப்போது சிறுவனின் கையிலிருந்த கயிறு லிஃப்ட் கதவில் சிக்கிக் கொள்கிறது. அதன் மறுமுனை சிறுவனின் கழுத்தை இறுக்கி லிஃப்டின் மேலே தூக்கி நிறுத்துகிறது.

இதனால் பயத்தில் அந்த சிறுவன் கத்துகிறான். உடனே, லிஃப்டில் இருந்த அவனின் அக்காவான சிறுமி, துணிச்சலாக செயல்பட்டு சிறுவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு, லிஃப்டு பட்டனை கீழ்நோக்கி அழுத்தி, அதன் பிரஷரைக் குறைக்கிறாள்.

பின்பு, வேகவேகமாக கயிறை அகற்றி தனது தம்பியை காப்பாற்றுகிறாள். இந்த காட்சிகள் லிஃப்டுக்குள் இருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. வீடியோ பார்த்த பலரும் சிறுமியின் செயலை மனதார பாராட்டியுள்ளனர். பதற்றம் அடையாமல் சமயோஜிதமாக செயல்பட்ட சிறுமி ஒரே நாளில் இணையத்தில் ஹீரோவானர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment