Advertisment

'போரில் உதித்த யோசனை' ராணுவ வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்த உக்ரைன் தம்பதி

வயது வந்த மகளைக் கொண்ட இந்த தம்பதியினர், போர் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறும் வரை ஒருவரையொருவர் சந்திக்கவில்லை.

author-image
WebDesk
New Update
'போரில் உதித்த யோசனை' ராணுவ வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்த உக்ரைன் தம்பதி

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 12 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று, கிவ்வில் உக்ரைன் தம்பதி ராணுவ வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட வீடியோவும், புகைப்படங்களில் சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை கவர்ந்துள்ளது.

Advertisment

கிவ் மேயர் Vitaliy Klitschko பகிர்ந்த வீடியோவில், திருமணம் செய்யும் லெசியா - வலேரி ராணுவ தம்பதி, ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். பின்னர், அவர்களுக்கு பூங்கொத்து வழங்கப்பட்டது. சுற்றியிருந்த அனைவரும் கைதட்ட, மேயரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதி சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் மற்றொரு வீடியோவில், ராணுவ வீரர்கள் பாட்டு பாடுகின்றனர். அதில் ஒருவர், வீணை போல் ஒலிக்கும் உக்ரேனிய நாட்டுப்புற இசைக்கருவியான பாண்டுராவை வாசிப்பதை தம்பதியினர் பார்த்து ரசிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அவர்களது திருமண புகைப்படங்களை பகிரும் இணையவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏபிசி தகவலின்படி, இந்த தம்பதியினர் 22 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கின்றனர். பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கிய பின்னர் மணமகள் வேலையை விட்டுவிட்டு, நாட்டிற்காகப் போராட பிராந்திய பாதுகாப்புப் படைகளில் சேர்ந்துள்ளார்.

வயது வந்த மகளைக் கொண்ட இந்த தம்பதியினர், போர் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யும் வரை ஒருவரையொருவர் சந்திக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ரஷ்ய எங்கள் மீது படையெடுப்பு நடத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் குடும்பம் ஒன்றாக இருக்க முடியவில்லை. என் கணவர் உயிருடன் இருக்கிறார், அவர் என்னுடன் இருக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியாது. எனவே, அனைவரது முன்னிலையிலும், கடவுள் முன்னிலையும் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு வயது வந்த மகள் ஒருவர் இருக்கிறார். இறுதியாக நாங்கள் திருமணம் செய்ததில் அவள் மகிழ்ச்சியாக இருப்பபார் என கருதுகிறோம் என்றனர்.

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 10 நாட்களில் 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment