Advertisment

Vacuum Challenge : ஆபத்து தெரியாமல் இவர்கள் செய்யும் விளையாட்டு எங்க போய் முடிய போகுதோ?

குடும்பதார்களை பலிகாடாக்கி அதை வீடியோவக எடுத்து இணையத்தில் வெளியீட்டு ரசிப்பதை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vacuum Challenge videos

Vacuum Challenge videos

Vacuum Challenge videos: கிகி சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இதற்கு அடுத்தப்படியாக தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சேலஞ்ச் பெயர் வேக்கம் சேலஞ்ச்.

Advertisment

கேட்டகவே வித்யாசமாக இருக்குல.. சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகுவது சகஜகமே. இந்த சவால்கள் மீது ஆர்வம் கொண்டர்கள் அவர்கள் ட்ரை செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் நண்பர்கள், குடும்பதார்களை பலிகாடாக்கி அதை வீடியோவக எடுத்து இணையத்தில் வெளியீட்டு ரசிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் வேக்கம் சேலஞ்ச் போட்டி எத்தகைய ஆபத்தானது என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்.

அது என்ன வேக்கம் சேலஞ்ச்?

குப்பைகள் கொட்டும் பைக்குள் ஆட்கள் உட்கார்ந்து கொள்கிறார்கள். அதற்குள் ஒருவர் குப்பை சுத்தம் செய்யும் வேக்கம் மெஷினின் குழாயை வைத்து ஆன் செய்து விடுகிறார். உடனே பிளாஸ்டிக் பை சுருங்கி உடலோடு இறுகி ஒட்டிக்கொள்கிறது. அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

பார்ப்பதற்கு மிகவும் காமெடியாகவும், பொழுதுபோக்காகவும் தெரியும் இந்த விளையாட்டுகளில் ஆபத்தும் இருக்கவே செய்கின்றன. எனவே அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டுகளை தவிர்க்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் வேண்டுதல் விடுத்தும் வருகின்றனர்.

இணையத்தில் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கும் வேக்கம் சேலஞ்ச் வீடியோக்கள் சிலவை உங்கள் பார்வைக்கு..

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment