#காதலர் தினம்: மனநிலை சரியில்லாத மனைவியை காதலால் அரவணைக்கும் கணவன்

சிலர் தங்கள் அன்பானவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி காதலர் தினத்தன்று அவர்களுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுப்பர். ரொமாண்டிக் டின்னருக்கு செல்வோம்.

காதலர் தினத்தைக் கொண்டாட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை உண்டு. சிலர் தங்கள் அன்பானவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி காதலர் தினத்தன்று அவர்களுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுப்பர். அப்படியில்லையென்றால், ரொமாண்டிக் டின்னருக்கு செல்வோம்.

ஆனால், ரோன் மற்றும் டோன்னா தம்பதியர், கடந்த 40 ஆண்டுகளாக ஒரே மாதிரி காதலர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் சந்திப்பிலேயே டோன்னா தான் தன்னுடைய வாழ்க்கை துணை என்பதை முடிவு செய்தார் ரோன். தாங்கள் காதலிக்க ஆரம்பித்த முதலாமாண்டு காதலர் தினத்தன்று, டோன்னாவுக்கு பஃபே கேண்டி எனப்படும் கடையிலிருந்து, அவருக்கு பிடித்தமான சாக்லேட்டுகளை வாங்கி இதய வடிவிலான சிகப்பு நிற கிஃப்ட் பாக்ஸில் அடைத்து பரிசளித்தார் ரோன்.

இவர்களுக்கு திருமணமாகி 39 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று அதே பாக்ஸில் டோன்னாவின் ஃபேவரைட் சாக்லேட்டுகளை பரிசளிக்கிறார் ரோன்.

காதலுக்கு வயது தடையில்லை என்பது ரோன்-டோன்னா தம்பதியரை பொறுத்தவரையில் மிகவும் பொருத்தம். ஆனால், இதில் சோகம் என்னவென்றால் கடந்த 2014-ஆம் ஆண்டு டோன்னாவும் மனநிலை சரியில்லாமல் போனது. 2015-ஆம் ஆண்டு அவரது நிலைமை மோசமானதால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தான் செய்வது டோன்னாவுக்கு மறந்திருக்கும் என ரோன் அறிந்திருந்தாலும், விடா முயற்சியுடன் தன்னுடைய காதலிக்கு அன்புடன் பிடித்தமானவற்றை செய்கிறார். தன்னுடைய இந்த நிலைமையிலும், ரோன் உடனான காதல் வாழ்க்கையை மட்டும் டோன்னா மறந்திருக்கவில்லை என்பது காதல் மீது நம்பிக்கைக்கொண்ட யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது.

×Close
×Close