இரு புலிகளின் நடுவே சிக்கிக்கொண்ட நபர்களின் ஈரக்குலை நடுங்கும் வீடியோ

நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, புலி சுதந்திரமாக சுற்றித்திரிந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?ஈரக்குலை நடுங்கிவிடும் அல்லவா?

By: January 28, 2018, 11:32:55 AM

நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, புலி சுதந்திரமாக சுற்றித்திரிந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?ஈரக்குலை நடுங்கிவிடும் அல்லவா? அப்படித்தான், இரு புலிகளின் நடுவே சிக்கிக்கொண்ட இரண்டு நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புலிகள் அவர்களை என்ன செய்தது என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அந்தாரி எனும் வனப்பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்கு புலிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், அவ்வழியாக இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களின் முன்னால் புலி ஒன்று மிக நெருக்கமாக வந்து அவர்களை சிறிது நேரம் உற்றுநோக்குகிறது. அவர்களை அந்த புலி ஏதாவது செய்துவிடுமோ என அஞ்சும் வேளையில், அது தனது பாதையை திருப்பி அமைதியாக வேறு வழியில் சென்றுவிடுகிறது.

’தப்பித்தோம், பிழைத்தோம்’, என அவர்கள் பெருமூச்சு விடுவதற்குள் அவர்களின் பின்னால் மற்றொரு புலி நின்று கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சியில் உறைந்த அவர்களை ஒன்றுமே செய்யாது அந்த புலியும் தனது வழியில் அமைதியாக சென்றுவிடுகிறது.

இந்த சம்பவத்தை அங்கு சிறிது தூரம் தள்ளியிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்திருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video bikers find themselves caught between two tigers watch what happens next

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X