Advertisment

வீடியோ: அடடடடா..! என்ன ஒரு கடமை உணர்ச்சி! பேருந்து இருக்கை மீது தாவித்தாவி டிக்கெட் வழங்கும் நடத்துநர்

கூட்டமாக உள்ள அந்த பேருந்தில், இருக்கைகளுக்கு மேல் ஏறி, ஒவ்வொரு இருக்கையாக தாவித்தாவி நடத்துநர் பயணச்சீட்டுகளை வழங்குகிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: அடடடடா..! என்ன ஒரு கடமை உணர்ச்சி! பேருந்து இருக்கை மீது தாவித்தாவி டிக்கெட் வழங்கும் நடத்துநர்

ஹரியாணா மாநிலத்தில் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க இந்த நடத்துநர் கையாண்ட முறையை பார்த்தால், ”என்ன ஒரு கடமை உணர்ச்சி” என உங்களுக்கு கேட்க தோன்றும்.

Advertisment

எல்லா கூட்டமாக உள்ள பேருந்துகளிலும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க பெரும்பாலும் என்ன செய்வார்கள்? சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தி ‘ஸ்டேஜ்’ போட்டுவிட்டு பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவார்கள். “டிக்கெட் கொடுத்தது போதும். பஸ்சை எடுங்க”ன்னு பயணிகள் கடுப்பாகும் மொமண்ட் அது.

ஆனால், ஹரியானாவில் உள்ள இந்த நடத்துநர் பயணிகள் டிக்கெட் வாங்கிவிட்டார்களா என பரிசோதிக்கவும், வாங்காத பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை வழங்கவும் என்ன செய்கிறார் தெரியுமா? கூட்டமாக உள்ள அந்த பேருந்தில், இருக்கைகளுக்கு மேல் ஏறி, ஒவ்வொரு இருக்கையாக தாவித்தாவி பயணச்சீட்டுகளை வழங்குகிறார்.

இதனை ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 36 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் உள்ள நடத்துநரின் ‘கடமை உணர்வை’ பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் கேலியான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் இத்தகைய பேருந்துகளில் பெரும்பாலான நடத்துநர்கள் இப்படியான முறையில் பயணச்சீட்டுகள் வழங்குவதாக வீடியோவில் ஒருவர் கருத்திட்டுள்ளார்.

Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment