Advertisment

வீடியோ: 9 அடி நீள அனகோண்டா பாம்பை வெறும் கையில் மீட்ட அசாத்திய பெண் போலீஸ்

அமெரிக்காவில் 9 அடி நீளம்கொண்ட அனகோண்டா பாம்பை, பெண் போலீஸ் ஒருவர் தனி ஆளாக, வெறும் கையில் மீட்ட வீடியோ, புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
police, anaconda, america

போலீஸ் அதிகாரியாக பணிபுரிவதென்பது சவாலான பணி என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த நேரத்தில் மக்களுக்கு ஆபத்து நேர்கிறதோ, அந்த சமயத்தில் உயிரையே பணயம் வைத்து காப்பாற்றும் எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். குறிப்பாக, தீயணைப்புத் துறை, வனத்துறை அதிகாரிகளின் வேலையெல்லாம் தினம் தினம் ஆபத்துகள் நிறைந்ததுதான். சில மாதங்களுக்கு முன், சென்னை கொடுங்கையூரில் உள்ள உணவகத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டபோது, அதை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Advertisment

அதேபோல், அமெரிக்காவில் 9 அடி நீளம்கொண்ட அனகோண்டா பாம்பை, பெண் போலீஸ் ஒருவர் தனி ஆளாக, வெறும் கையில் மீட்ட வீடியோ, புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லியோன் கவுண்டி பகுதியில் பொதுமக்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்த 9 அடி நீளம்கொண்ட மஞ்சள் நிற அனகோண்டாவை எமிலி ஷா எனும் பெண் அதிகாரி எந்தவித உபகரண உதவியும் இல்லாமல் மீட்டிருக்கிறார். கையிலேயே அந்த பாம்பை பிடித்து பைக்குள் லாவகமாக நுழைக்கும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கும் புல்லரிப்பு நிச்சயம்.

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment