Advertisment

வீடியோ: 4 மாத குழந்தையை பொம்மை போல் சுழற்றிய தந்தை: அலறிய குழந்தை

உக்ரைன் நாட்டில் தனது நான்கு மாத குழந்தையின் கைகளையும் கால்களையும் பிடித்து தன் இஷ்டம் போல் குழந்தையின் தந்தையே சுழற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
,child, parents, child safety, child abuse, ukraine, crimes against children,

உக்ரைன் நாட்டில் தனது நான்கு மாத குழந்தையின் கைகளையும் கால்களையும் பிடித்து தன் இஷ்டம் போல் குழந்தையின் தந்தையே சுழற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், அது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தனது இச்செயலை குழந்தையின் தந்தை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிறார்.

Advertisment

தென் உக்ரைனில் உள்ள கேர்சன் நகரை சேர்ந்தவர் கிரில் ஸ்ட்ரெமோசோவ் (Kirill Stremousov). இவர் தன் நான்கு மாத மகள் மிலாடாவின் கைகளையும், கால்களையும் பிடித்து சுற்றி வளைப்பது, தலைகீழாக தொங்கவிடுதல், முன்னும் பின்னும் அசைத்தல், ஒற்றை கை அல்லது ஒற்றை காலை பிடித்து குழந்தையை தன் தலைக்கு மேலே சுழற்றுதல் உள்ளிட்ட பயங்கரமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். தனது குழந்தையை ஒரு பொம்மையைபோல் நினைத்து இச்செயல்களில் ஈடுபட்டது, அக்குழந்தையை துன்புறுத்துவது போன்று அமைந்தது. அதனை, அவரே வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

அந்த வீடியோவில், குழந்தை பயத்தில் அலறுவதையும் பொருட்படுத்தாமல், அவர் தொடர்ந்து குழந்தையின் கை, கால்களை பிடித்து அங்குமிங்கும் சுற்றுகிறார்.

மேலும், அந்த வீடியோவில் தனது இச்செயலை கிரில் நியாயப்படுத்தியும் பேசியிருக்கிறார். “அவளுடைய எலும்புகள் மேலெழும்புகின்றன. இதனை அவள் நன்றாகவே உணர்கிறாள்”, “விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பயிற்சியின்போது இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வார்கள்”, ”இதனை செய்யும்போது அவளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனை அவள் மகிழ்ச்சியாக உணர்கிறாள். அதனால், அவள் சிரிக்கிறாள்”, என தன் மகள் பயத்தில் அலறுவதை கூட பொருட்படுத்தாமல், தான் செய்வதை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார் கிரில் ஸ்ட்ரெமோசோவ்.

இதனை வீடியோவாக எடுத்து கிரில் ஸ்ட்ரெமோசோவ் அதனை யுடியூபில் பதிவேற்றம் செய்தார். ’ஜிம்னாஸ்டிக்ஸில் இளம் வயது உலக சாம்பியன்’ என பெயரிடப்பட்ட அந்த வீடியோவை யுடியூப் இணையத்தளம் நீக்கிவிட்டது. இருப்பினும், பலர் அந்த வீடியோவை வெவ்வேறு வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இச்சம்பவம் அக்குழந்தையை துன்புறுத்துவது போல் உள்ளது என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களையும், குழந்தையின் தந்தை மீது கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

,child, parents, child safety, child abuse, ukraine, crimes against children,

,child, parents, child safety, child abuse, ukraine, crimes against children,

,child, parents, child safety, child abuse, ukraine, crimes against children,

Ukraine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment