Advertisment

வைரல் வீடியோ: வடகிழக்கு மாநில பெண்களை தரக்குறைவாக நடத்திய தமிழக இளைஞர்கள்

வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண்களையும், ஆண்களையும், தமிழக இளைஞர்கள் சிலர் மிக மோசமாக விரும்பத்தகாத உடல் மொழியுடன் துன்புறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
racism, india racism, racism against northeast people, chennai fc, north east united fc, chennai fans harass northeast woman

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெண்களையும், ஆண்களையும், தமிழக இளைஞர்கள் சிலர் மிக மோசமாக விரும்பத்தகாத உடல் மொழியுடன் துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானத்தில், சென்னையின் எஃப்.சி. அணிக்கும், நார்த் ஈஸ்ட் அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக, வடகிழக்கு மாநில ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக இளைஞர்கள் சிலர், வடகிழக்கு மாநில பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வடமாநில இளைஞர்களின் முன்பு மோசமான உடல் மொழியில் நடனமாடி அவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

வேறு மாநில பெண்களை இவ்வாறு தரக்குறைவாக நடத்திய இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நார்த் ஈஸ்ட் அணியின் உரிமையாளருக் நடிகருமான ஜான் ஆபிரகாம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Racism
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment