வைரல் வீடியோ: உலக அழகி மனுஷி சில்லாரிடம் அன்பு முத்தத்தை பரிமாறிய சுஷ்மிதா சென்

மனுஷி சில்லாரும், சுஷ்மிதா சென்னும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By: Published: December 1, 2017, 10:51:55 AM

உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லாரும், பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக அழகி பட்டத்தை 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் சமீபத்தில் வென்றார். மனுஷி சில்லாரை இந்தியாவே பாராட்டியது. அதில், 1994-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற நடிகை சுஷ்மிதா சென்னும் ஒருவர்.

இந்நிலையில், சுஷ்மிதா சென்னும், மனுஷி சில்லாரும் விமானத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சுஷ்மிதா சென் மனுஷி சில்லாருக்கு சின்ன சின்ன அறிவுரைகளையும் வழங்குகிறார். பின்பு, மனுஷி சில்லாரின் கையில் அன்பு முத்தத்தை வழங்குகிறார்.

Sush & Miss Word 2017 Manushi Chhillar❤️✈️ #sushmitasen #manushichillar

A post shared by Sushmita Sen Fanpage (@voguesush) on

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video watch ex miss universe sushmita sen advising miss world manushi chhillar on flight

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X