Advertisment

அட கொஞ்ச நேரம் குளிக்கலாம்னு வந்தா... தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட யானை - வைரல் வீடியோ

கட்டை, கயிறு, கடப்பாரை ஆகியவை மட்டுமே பிரதானமான மீட்புக் கருவிகளாக இருக்கிறது. நீண்ட நேர போராட்டத்திற்கு வெளியே வந்த யானையை பிறகு அதன் தாய் யானையிடம் வனத்துறையின் பத்திரமாக சேர்த்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Viral news tamil baby elephant falls into reservoir gets rescued by forest officials

Baby elephant falls into reservoir : கொதிக்கும் கோடைக்காலம் அப்டின்னு தான் இந்த வருஷத்தின் கோடை காலத்திற்கு பேர் வைக்கனும். மனுசங்க நம்மனாலையே இந்த வெயிலோட கோரத்தை தாங்கிக்க முடியல. வனத்தில் வாழும் விலங்குகளின் நிலைமை இன்னும் கொஞ்சம் மோசம் தான்.

Advertisment

இந்த காலகட்டத்தில் தான் உணவு மற்றும் நீர் தேவைக்காக யானைகள் மற்றும் இதர வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருவது வழக்கம். அப்படி வந்த போது இந்த குட்டி யானை மட்டும் தண்ணீர் தொட்டிக்குள் விழ நிலைமை கொஞ்சம் கடினமாகிவிட்டது. கிராமம் ஒன்றுக்கு தண்ணீர் வழங்கும் இந்த தொட்டியில் விழுந்த யானைக் குட்டியால் மேலே எழ முடியவில்லை.

மேலும் படிக்க : மீன்கள் வேட்டையாடுமா...? அதிசயிக்க வைக்கும் இயற்கை... வைரல் வீடியோ

ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் இந்த யானையை மீட்க கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆனது என்று குறிப்பிட்டுள்ளார். கட்டை, கயிறு, கடப்பாரை ஆகியவை மட்டுமே பிரதானமான மீட்புக் கருவிகளாக இருக்கிறது. நீண்ட நேர போராட்டத்திற்கு வெளியே வந்த யானையை பிறகு அதன் தாய் யானையிடம் வனத்துறையின் பத்திரமாக சேர்த்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 76.4 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment