வைரல் வீடியோ : பொண்ணுங்ககிட்ட பிரச்சனை பண்ணுன இப்படி தான் அடி விழும் ப்ரோ

இரண்டு அரை... ஒரு உதை... லிஃப்டிலேயே சுருண்டு விழுந்தார் அந்த இளைஞர்

Viral video : பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகாத இடமே கிடையாது. தங்களுக்கான பாதுகாப்புக் கலையை தாங்களே கற்றுக் கொண்டால் அவர்கள் உதவிக்கு யாரையும் நாடமாட்டார்கள்.

லிஃப்டில் மாட்டிக் கொண்டு உதை வாங்கிய இளைஞர் – Viral video

அப்படித்தான் இருக்கிறது இந்த வைரல் வீடியோ. சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ… லிஃப்டில் ஏறிய பெண் ஒருவரின் பின்னால் மற்றொரு இளைஞரும் உள்ளே நுழைகிறார்.

அந்த பெண் தன்னுடைய அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அந்நபர் அப்பெண்ணிடம் நெருங்குகிறார். அந்த பெண் விலகி நின்று கொள்கிறார். மீண்டும் அந்த பெண்ணை நெருங்கிய அந்நபர் அந்த பெண்ணின் தோள் மீது கைவைக்கிறார்.

கோபத்தின் உச்சத்தை அடைந்த அப்பெண், அந்த இளைஞரின் கன்னத்தில் சரமாரியாக இரண்டு அரைகள் தருகிறார். பின்னர் ஓங்கி ஒரு உதை. அந்த தாக்குதலை எதிர்பார்த்திராத அந்நபர் லிஃப்ட்டில் சுருண்டு விழுந்துவிட்டார்.  இந்த நிகழ்வு அனைத்தும் அப்படியே அந்த லிஃப்டில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்தென்னவோ 2016ல் இருந்தாலும் இப்போது சமூக வலை தளங்களில் மிகவும் பரபரப்பாக ட்ரெண்டாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close