Advertisment

ஆசையாக குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்? வைரலாகும் வீடியோ!

போலீஸ் அதிகாரி பேசியது என்னை மிகவும் காயப்படுத்தியது

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video

viral video

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரில் காண வந்த மாற்றுத்திறனாளியை போலீசார் அவமரியாதையுடன் பேசி அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 7 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைப்பெற்றது. சென்னை அணியின் ஆட்டம் என்பதால் வழக்கம் போல் அரங்கத்தில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம். அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவாலியர்-1 ஆட்டம் என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் போட்டியை காண அலையென திரண்டு வந்திருந்தனர். இந்த நேரத்தில் தான் தீபக்கிற்கு இப்படியொரு அவமரியாதை சம்பவம் நடந்திருக்கிறது.

அன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி கண்டதால் அனைவரும் அதைக் குறித்து விவாதிக்கவும், பேசவும் விமர்சிக்கவும் பிஸியாக இருந்ததால் தீபக்கிற்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தனக்கு நேர்ந்தவற்றை வீடியோ மூலம் தீபக் பதிவிட்டது 2 நாட்கள் கழித்து இப்போது அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் தீபக்கிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

யார் இந்த தீபக்? சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?

சமூக ஆர்வலரான தீபக் ஒரு மாற்றுத்திறனாளி. உடல் அளவில் தனக்கு இருக்கும் குறையை தூக்கிப்போட்டு விட்டு தன்னம்பிக்கையுடன் பிறருக்கு ரோடல் மாடலாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லை மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களுக்காகவும் உரிமைக்காவும் போராடி வருகிறார். இவர் கடந்த 7 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரில் காண தனது மனைவியுடன் காரில் சென்றிருந்தார்.

ஆனால் கார் பார்க்கிங்க்கு அனுமதி இல்லாததால் தீபக் உள்ளே செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் தீபக் காரில் இருந்து இறங்கி தான் ஒரு மாற்றுத்திறனாளி என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் அவரிடம் பொறுமையாக எடுத்துக் கூறி கார் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.அப்போது அவருக்கு பின்னால் ஜூப்பில் அமர்ந்துக் கொண்டிருந்த உதவி ஆணையர் தீபக்கிடம் அவமரியாதை பேசியுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்தவற்றை தீபக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோயுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “ ‘அவன போவ சொல்லுயா’ என்று அதிகாரி மரியாதை குறைவாக பேச. அதற்கு தீபக், ‘நான் ஊனமுற்றவர்’ என்று கூற, ‘அதுக்கு என்னயா?’ என்று மீண்டும் சத்தம்போட்டிருக்கிறார் அந்த உதவி ஆணையர். பின்னர் தீபக் ‘நான் ஒரு குடிமகன்’ என்று கூற, ‘எல்லாவனும் தான்’ என அலட்சியமாக பேசியிருக்கிறார் அதிகாரி.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதுக் குறித்து தனியார் செய்தி பத்திரிக்கை ஒன்றிற்கு தீபக் அளித்திருக்கும் பேட்டியில், “என் உறவினர் ஒருவர் எனக்கும் என் மனைவிக்கும் ஐபிஎல் போட்டியை நேரில் காண டிக்கெட் ஏற்பாடு செய்து தந்தார்.

இதுவரை நான் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியையும் நேரில் பார்த்ததில்லை. மிகவும் ஆசையுடன் என் மனைவியை அழைத்துக் கொண்டு அன்று சேப்பாக்கம் சென்றிருந்தேன். டிக்கெட் இருந்தும் எங்களால் அன்று போட்டியை காணமுடியவில்லை. அந்த போலீஸ் அதிகாரி பேசியது என்னை மிகவும் காயப்படுத்தியது. இனி எந்த ஒரு கிரிக்கெட் போட்டியையும் நேரில் பார்க்க போகமாட்டேன்.

என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனத்தை பார்க்கிங் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டாமா? ஐபிஎல் போட்டியை நடத்துவது ஐபிஎல் நிர்வாகமா? இல்லை காவல் துறையா? எனக்கு இப்படியொரு பிரச்சனை நடக்கும் போது அந்த இடத்தில் ஒரு ஐபிஎல் வாலிண்டியர் கூட இல்லை. அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Social Media Viral Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment