scorecardresearch

கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு… அசால்ட் மனிதரின் அதிர்ச்சி வீடியோ!

சுமார் 15 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு… அசால்ட் மனிதரின் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளத்தில் தினந்தோறும் பிரம்மிக்க வைக்கும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். சில சமயங்களில் பல நம்ப முடியாத வீடியோக்களை காண்கிறோம்.

அந்த வகையில், இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர், ராட்சத மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் காணொலி பார்ப்போரை மிரள வைக்கிறது.

நண்பர்களை போல, மலைபாம்புடன் வளம் வரும் அந்நபரின் முகத்தில் எவ்வித பயமும் இல்லாததை வீடியோவில் தெளிவாக காணலாம்.

இறுதியாக, அந்த மலைபாம்பு அவரது தோள்களில் இருந்து இறங்கி தரையில் ஊர்ந்து செல்லத் தொடங்குகிறது. சுமார் 15 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Royal Pythons என்ற பக்கம், Best Friends என்ற கேப்ஷனில் பகிர்ந்துள்ளது. மக்கள் வீடியோவிற்கு கமெண்ட்களையும், லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Viral video of 15 feet phyton enjoy with indonesia man