Advertisment

தொந்தரவு செய்தால் இப்படித்தான் மிதி வாங்கணும் - எச்சரிக்கும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி; வைரல் வீடியோ

ஜீப்பை தாக்கி மேற்கொண்டு செல்லும் வழியை அடைத்தேவிட்டது யானை. அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று சுற்றுலா பயணிகள் ஓடி வரும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
viral video, elephants viral video, trending videos

viral video of African elephant charging tourists : யானைகளின் இருப்பிடத்திற்கு சென்று அதன் வாழ்விடங்களை பார்ப்பது போன்ற சவாரிக்கள் தென்னாப்பிரிக்காவில் மிகவும் சகஜம். ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் என்று மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த சவாரிகள் மூலம் யானைகளைப் பற்றி அறிந்து கொள்கிறனர். இந்த சுற்றுலா துறை மூலம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர். ஆனாலும் கூட வனவிலங்குகள் இருக்கின்ற இடத்திற்கு சென்று அவைகளை தொந்தரவு செய்வது மிகவும் மோசமான செயலாகும். அப்படி செய்தால் என்ன ஆகும் என்று பாருங்கள்

Advertisment

உசுரு வாழ என்னல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு? திமிங்கலங்களுக்கு பயந்து கப்பலில் குதித்த சீல்

காரில் இருந்த வண்ணமே பார்த்துவிட்டுச் செல்லாமல் கீழே இறங்கி யானைகள் வரும் வரை, அவைகள் தாக்கும் வரை அங்கிருந்து நகராமல் இருப்பது எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஆப்பிரிக்க யானை ஒன்றை பார்த்துக் கொண்டிருக்க, சவாரி வந்திருக்கும் ஜீப்பிற்கு மிகவும் அருகே இடது பக்கத்தில் இருந்து மற்றொரு யானை சுற்றுலா வந்தவர்களை தாக்க துவங்குகிறது. இந்த வீடியோவை 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

ஜீப்பை தாக்கி மேற்கொண்டு செல்லும் வழியை அடைத்தேவிட்டது யானை. அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று சுற்றுலா பயணிகள் ஓடி வரும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment