ஆந்திர மாநிலம் அடிகொப்பாலா பகுதியில் அமைந்துள்ள நாகர்ஜூன சாகர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு நபர்களை கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றியுள்ளார் போலீஸ் கான்ஸ்டபிள் ப்ரவீன் குமார். அவரின் இந்த சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திரப் பிரதேசம் காவல்த்துறை இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நான்கு இளைஞர்கள் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது அந்த காவலர் உடனே அவர்களை காப்பாற்றியுள்ளார்.
இப்போ இது தேவை தானா? ஜே.சி.பியில் ரிசப்ஷன்… பழி வாங்கிய ஆப்பரேட்டர்
பிறகு நான்கு நபர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக சேர்க்கப்பட்டனர். ஆந்திர மாநில டிஜிபி கௌதம் சவாங், ப்ரவீனின் இந்த வீர தீர செயலை பாராட்டியுள்ளார்.
கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட நபர்கள் உடனே காவல்துறை வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பலரும் சமூக வலைதளஙளில் ப்ரவீனின் இந்த செயலை பாராட்டி தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil