Advertisment

பியர் கேனில் சிக்கிக் கொண்ட நல்ல பாம்பு; போராடி மீட்ட குழுவினர் - வைரல் வீடியோ

மக்களே நாம் செய்யும் பல விசயங்கள் நம்மை மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல உயிரினங்களையும் ஆபத்தில் சிக்க வைத்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

author-image
WebDesk
New Update
Viral video, cobra videos, trending snake videos,

viral video of cobra stuck in beer can : மலைப் பகுதிகளில் பயணம் செய்யும் போது பொதுவாக குடிக்கக் கூடாது என்றும் பாட்டில்களை சாலையோரங்களில் வீசிச் செல்லக் கூடாது என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த பகுதிகளில் நடந்து செல்லும் விலங்குகளின் காலில் ஏறினால் அது அந்த விலங்குகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும். ஆனாலும் பல சமயங்களில் பாட்டில்கள் மட்டுமின்றி ப்ளாஸ்டிக் பேப்பர்கள், பைகள், டின் பியர் கேன்கள் போன்றவையும் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணம்.

Advertisment

ஒடிசாவில் வைரலாகி வந்த இந்த வீடியோவில் நல்ல பாம்பு ஒன்று காலியான பியர் கேனில் சிக்கிக் கொண்டது. அதன் தலையை வெளியே எடுக்கவும் இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பாம்பைப் பார்த்த மதிப்பூர் கிராம மக்கள் பாம்புகளை பிடிக்கும் நபர்களுக்கு தகவல் அளித்தனர்.

பாம்பு மூச்சிவிடுவதற்கு வசதியாக முதலில் கேனின் ஒரு பகுதி வெட்டபப்ட்டது. மேற்கொண்டு அதற்கு காயம் ஏதும் ஏற்படாத வகையில் ப்ளாஸ்டிக் ட்யூப் கொண்டு அதன் வாய் நன்றாக மூடப்பட்ட பிறகு கேனை வெட்டி பாம்பை மீட்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கை 20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றது. அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்கு முன்பு அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் இந்த வீடியோ குறித்து தங்களின் கருத்துகளையும் பொதுவெளியில் அபாயம் ஏற்படுத்தும் பொருட்களை கொட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment