Advertisment

கொலராடோ மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ; புத்தாண்டில் ஏற்பட்ட சோகம்

மணிக்கு 105 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் போல்டருக்கு அருகே உள்ள லூயிஸ்வில் மற்றும் சுப்பூரியர் என்ற இரண்டு நகரங்களில் காட்டுத்தீ மிகவும் வேகமாக பரவியது.

author-image
WebDesk
New Update
Viral video of Colorado wildfires burn hundreds of homes

Viral video of Colorado wildfires burn hundreds of homes : அமெரிக்க மாகாணமான கொலராடோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீ அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து சாம்பலாக்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வருடக்கடைசி மற்றும் புத்தாண்டு நாட்களின் போது வேறு இடத்திற்கு இடமாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அரிசி உமியில் லஞ்ச் டப்பாவும், டம்ளர்களும்; அசத்தும் “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் – வைரலாகும் வீடியோ

மணிக்கு 105 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் போல்டருக்கு அருகே உள்ள லூயிஸ்வில் மற்றும் சுப்பூரியர் என்ற இரண்டு நகரங்களில் காட்டுத்தீ மிகவும் வேகமாக பரவியது. 580க்கும் மேற்பட்ட வீடுகள், உணவகங்கள், கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது என்று செய்திகள் தெரிவிக்கிறது. நவீன வரலாற்றில இவ்வளவு மோசமான இயற்கை பேரிடரை இந்த மாகாணம் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

புலி பசித்தால் புல்லை தின்னாது… ஆனால் கார் பம்பரை சாப்பிடும் – வைரல் வீடியோ

மிகவும் விரைவாக தீ பரவியதால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விபத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போல்டரின் ஷெரிஃப் கூறியுள்ளார் என ஏ.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தீவிர காற்று இல்லை எனவே அதற்கான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் பனி பெய்ய துவங்கும் என்று வானிலை முன்னறிவிப்பு அம்மக்களின் அச்சத்திற்கு முடிவு வைத்துள்ளது. ஜூலை 1ம் தேதி துவங்கி டிசம்பர் 29 கால கட்டம் வரை மிகவும் வறட்சியான சூழலே நிலவியது. இதன் காரணமாக தான் இந்த காட்டுத்தீ பரவியது என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment