Advertisment

இது பறவையா? கடல் சிலந்தியா? மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ;

பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பவளப்பாறைகள் மத்தியில் இருந்து மேலே எழும்பும் இந்த உயிரினத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஹிட் என்று கூட கூறலாம்.

author-image
WebDesk
New Update
Viral video of Comatulida or feather stars hits instagram one million views

Viral video of Comatulida : இயற்கை மதிப்பிடவே முடியாத பல்வேறு அழகான, பேரழகான ரகசியங்கள தங்களுக்குள்ளவே வைத்திருக்கு… என்றாவது அதியசமா, ரொம்ப அதிசயமா தன்னுடைய ரகசியத்தை உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனுக்கு காட்டும் போது உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அதை பார்த்து பிரமிச்சு தான் போய்விடுகின்றோம்.

Advertisment

அப்படியான ஒரு அரியவகை உயிரினத்தை படம் வீடியோவாக வெளியிட்டுள்ளார் வீடியோ கலைஞர் மார்செலோ ஜோஹன் ஒகட்டா. கோமட்டுலிடா (Comatulida) என்ற இந்த உயிரினம் பார்ப்பதற்கு ஒரு பெரிய வகை சிலந்தி போல் இருந்தாலும் கடலுக்குள் வாழும் ஒரு உயிரினம் இது.

8க்கும் மேற்பட்ட இறக்கைகளை கொண்ட இந்த உயிரினத்தின் உடல் இறக்கைகள் அனைத்தும் இணையும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வாய் மேற்புறம் அமைந்திருக்கும் இந்த உயிரினம் அழகாக நீந்துவதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பவளப்பாறைகள் மத்தியில் இருந்து மேலே எழும்பும் இந்த உயிரினத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஹிட் என்று கூட கூறலாம். வெளியிடப்பட்ட ஒரு நாளில் கிட்டத்தட்ட 15 லட்சம் நபர்கள் இன்ஸ்டகிராமில் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment