மனுசப் பயலுக மாதிரி இல்லப்பா! தேவைக்கு தான் தண்ணீ குடிப்போம் – யானையின் வைரல் வீடியோ

28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.

viral video of elephant drawing water from tubewell

viral video of elephant drawing water from tubewell : குடிநீர் சேகரிப்பு மற்றும் சிக்கனமான பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜல் சக்தி துறை ஒரு சூப்பர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் யானை ஒன்று தன்னுடைய தேவைக்கு ஏற்ற அளவில் அடி குழாயில் பம்ப் அடித்து அந்த தண்ணீரை குடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

யானைக்கும் கூட ஒரு சொட்டு தண்ணீரின் மதிப்பு என்ன என்று தெரிந்துள்ளது. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் ஏன் தண்ணீரை வீணாக்கி வருகின்றோம் என்ற கேப்ஷனோடு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது அந்த துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்.

அட “தம்மாத்துண்டு” மேட்ட கடக்க எவ்வளவு போராட்டம்! – குட்டி யானையின் வைரல் வீடியோ

இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது. யானையின் இந்த செயலை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை அதில் தெரிவித்துள்ளனர். 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of elephant drawing water from tubewell only as much it needs

Next Story
கல்யாணத்திற்கு நடனமாடிக் கொண்டே வருவது பழைய ஸ்டைல்; காவல்துறையினருடன் வருவது தான் புது ஸ்டைல்viral video, wedding viral video, today news, viral news, trending viral news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com