புலியும் யானையும் ஒரே இடத்தில் சந்தித்தால்? கர்நாடக வனத்தில் திக் திக் நிமிடங்கள்
சவாரி மிகவும் அட்வென்ச்சர் நிறைந்தது தான் ஆனால் இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் நிலையில் சவாரி வாகனங்கள் மிகவும் பாதுகாப்பான தொலைவில் விலகி இருப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Viral video of Elephant meets Tiger in Karnataka : வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் அங்கே நிகழும் நிகழ்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அது வனவிலங்குகளுக்கும் வனங்களுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய நல்ல விசயமாகும்.
Advertisment
சமீப காலங்களில் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் சில சம்பவங்கள் அங்கும் இங்கும் அரங்கேறியதை நாம் பார்த்திருப்போம். சுல்தானா புலி சவாரி வாகனங்களுக்கு மிக அருகில் வந்து நாய் ஒன்றை வேட்டையாடியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் வனத்துறை அதிகாரி சுதா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்நாடகாவில் அமைந்துள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் குளம் ஒன்றில் யானை குளித்துக் கொண்டிருக்கிறது. நடுவில் சவாரி செய்வதற்கான பாதை ஒன்று உள்ளது. அதற்கு அந்த பக்கத்தில் புலி ஒன்று நடந்து வருகிறது.
ஒரு புலியும் யானையும் ஒரே இடத்தில் சந்தித்தால்? அப்போது நீங்கள் சவாரி செய்யும் வாகனத்தில் அமர்ந்திருந்தால்? அந்த வனவிலங்குகளுக்கு எத்தகைய தொந்தரவையும் அளிக்காமல் வண்டியை பின்னோக்கி எடுத்துச் செல்வதே சிறந்தது.
சுதா ராமன் பதிவிட்டுள்ள வீடியோவிலும் அது தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சவாரி மிகவும் அட்வென்ச்சர் நிறைந்தது தான் ஆனால் இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் நிலையில் சவாரி வாகனங்கள் மிகவும் பாதுகாப்பான தொலைவில் விலகி இருப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news