Advertisment

மாஸ்க் போட சொல்லும் இந்த சிறுவனுக்கு இருக்கும் அறிவு கூட பெரியவர்களுக்கு இல்லை! - மனதை உலுக்கும் வைரல் வீடியோ

இந்த மக்களுக்கு என்னதான் ஆச்சு என்று ஒன்றுமே புரியவில்லை. கொரோனா முடிவுக்கே வந்துவிட்டது என்று நினைத்து இவ்வளவு ஹாயாக சுற்றினால் நிச்சயமாக மூன்றாம் அலை நம் அனைவருக்கும் உண்டு

author-image
WebDesk
New Update
மாஸ்க் போட சொல்லும் இந்த சிறுவனுக்கு இருக்கும் அறிவு கூட பெரியவர்களுக்கு இல்லை! - மனதை உலுக்கும் வைரல் வீடியோ

Viral video of little boy urging people to wear masks : கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கவும் பலரும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று ஜாலியாக ஊர்சுற்ற கிளம்பிவிட்டார்கள். பி.ஆர்.டி.சி.ஆர் சோதனைகள் மற்றும் இபாஸ் கட்டாயம் இல்லை என்று தெரிந்தவுடன் பலரும் சுற்றுலா தளங்களை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். மணாலியில் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் படிக்க : அமைதியை தேடி மணாலி போனவங்க நம்ம எல்லாருக்கும் சாந்தி தர போறாங்க! வைரல் புகைப்படம்

தற்போது தர்மசாலா பகுதியில் சிறுவன் ஒருவன் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரிடமும் மாஸ்க் அணிய கூறும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. பாக்ஸு நாக் பகுதியில் மாஸ்க் அணியாமல் வரும் அனைவரிடமும் மாஸ்க் அணிய சொல்கிறார் அந்த இளம் கொரோனா தடுப்பு வீரர். ஆனால் பலரும் அந்த சிறுவனின் வேண்டுகோளை காதில் கூட வாங்கிச் செல்லாமல் மேற்கொண்டு நகரும் காட்சிகள் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment