Advertisment

ஆதரவற்ற நாய்களுடன் மைதானத்திற்கு வந்த கால்பந்தாட்ட வீரர்கள் - நெகிழ்ச்சி வீடியோ

வெறும் 24 மணி நேரத்தில் 20 லட்சம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
viral video of Russian football team walking with shelter dogs

viral video of Russian football team walking with shelter dogs : ஜெனிட் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று அறியப்படும் ஜெனிட் கால்பந்தாட்ட கிளப்பின் வீரர்கள் கஸ்ப்ரோம் மைதானத்தில், புதிய வீடு தேடி காத்திருக்கும் ஆதரவற்ற 11 நாய்க்குட்டிகளுடன் வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 30ம் தேதி அன்று ரஷ்யாவில் செல்லப்பிராணிகள் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ரஷ்யாவின் கைனொலோஜிக்கல் ஃபவுண்டேஷனுடன் இணைந்து இந்த ஆதரவற்ற செல்லப்பிராணிகளுக்கு உதவும் வகையில் இப்படி ஒரு அணி வகுப்பை நடத்தியுள்ளனர் விளையாட்டு வீரர்கள்.

Advertisment

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த 11 நாய்களுடன் நடந்த வீரர்கள் கேமரா முன்பு சென்று இந்த நாய்களுக்கு வீடு வேண்டும் என்றும் ஷெல்ட்டரில் இருக்கும் நாய்களை தத்தெடுக்க முயலுங்கள் என்றும் கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 24 மணி நேரத்தில் 20 லட்சம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவின் மேல் இந்த குட்டி நண்பர்களுக்கு சரியான வீட்டை கண்டுபிடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த வீடியோவிற்கு நெட்டின்கள் பலரும் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்து வாழ்த்துகளை வீரர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment