Advertisment

காது கேளாத தந்தையுடன் முதல் முறையாக சைகை மொழியில் பேசும் மகள்; “க்யூட் வீடியோ” - நெகிழும் நெட்டிசன்கள்

முதன்முறையாக சைகை மொழியில் தன்னுடைய மகள் பேசியதை நினைத்தும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் மேடியின் தந்தை.

author-image
WebDesk
New Update
Viral video, trending viral videos, ASL

Viral video of toddler : பிறந்து 19 மாதங்களே ஆன மேடிசன் என்ற பெண் குழந்தையின் தந்தை ஒரு மாற்று திறனாளி. சைகை மொழி மூலமே தன்னுடைய கருத்துகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். தன்னுடைய மகள் மேடிசனுடன் தந்தை ஜச்சாரி சமீபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்பாவிற்கு முன்னாள், கையில் இரண்டு பொருட்களை வைத்த வண்ணம் நடந்து சென்ற மேடிசன் திடீரென கையில் இருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு, தந்தையைப் பார்த்து சைகை மொழியில், அங்கே ஒரு குட்டிப்பாப்பா அழுது கொண்டிருக்கிறாள் என்று மேடிசன் கூறியுள்ளார்.

மேடிசனுக்கு காதுகள் நன்றாக கேட்கும். ஆனாலும் தன்னுடைய தாயும் தந்தையும் உரையாடிக் கொள்ளும் பழக்கத்தை பார்த்து நிறைய கற்றுக் கொண்ட மேடிசன் தக்க நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் அருகில் என்ன நடக்கிறது என்பதை முதன்முறையாக கூறியுள்ளார்.

பல வயது வந்தவர்களும் சைகை மொழியை கற்றுக் கொள்ள திணறும் போது இந்த குட்டிச்சுட்டி உடனே கற்றுக் கொண்டதை குறித்து நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று முதன்முறையாக சைகை மொழியில் தன்னுடைய மகள் பேசியதை நினைத்தும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் மேடியின் தந்தை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment