வீடியோ: அம்மானா சும்மா இல்ல! கட்சி கொடி தூக்கிய மகனை வெளுத்து வாங்கிய தாய்

சிவகங்கை மாவட்டத்தை முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளரின் இரண்டாவது மகன் தமிழ்செல்வன். இவர் தனது தாய்க்குத் தெரியாமல் தந்தையுடன் கட்சி கூட்டம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு விசிக கொடியை ஏற்றியும், கோஷங்கள் எழுப்பியும் உள்ளார் அந்தச் சிறுவன்.

தமிழ்செல்வன் கோஷங்கள் எழுப்பும் வீடியோவை அவரது தந்தை முகநூல் பதிவிட அந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. இதனைப் பார்த்த சிறுவனின் தாய், வீட்டிற்குத் திரும்பினார். பின்பு அவரது மகன் தமிழ்செல்வனை துடைப்பத்தால் அடி வெளுத்து வாங்கினார். தனது அடிப்பதை அவர் வீடியோ பதிவும் செய்துள்ளார்.

இந்த வீடியோவை எடுக்கும்போதே, “கட்சி பற்று எனக்கு வேண்டாம், நாட்டுப் பற்று எனக்கு போதும்… சொல்லு வீரவணக்கம் வீரவணக்கம் என் அம்மாவுக்கு வீரவணக்கம். சொல்லு.” என்று திட்டிக்கொண்டே அடித்தார். சிறிய வயதிலேயே விசிக கட்சி கொடியைத் தூக்கி பிடித்த மகனைக் கதறவிட்ட தாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

×Close
×Close