டாய்லெட்டில் மறைந்து இருந்த 5 அடி நீள பாம்பு.. பயத்தின் உச்சத்துக்கு சென்ற நபர்! பயமுறுத்தும் வீடியோ.

காலை வழக்கம் போல் பாத்ரூம் சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பார்த்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

By: Updated: June 20, 2019, 05:44:11 PM

viral video today : பெங்களூரில் 5 அடி நீளமுடைய பாம்பு வெஸ்டர்ன் டாய்லெட்டில் மறைந்திருந்த சம்பவம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்திருந்த பாம்பை நபர் ஒருவர் தைரியமாக பிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள். பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள்.

தொடர்ந்து இணையத்தில் பலவகையான பாம்பு வீடியோக்கள் வெளிவந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பை மூட்டும். ஆனால் இன்னும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே பயத்தையும் பதற்த்தையும் ஏற்படுத்தும். அப்படி ஒரு வீடியோ தான் நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

பெங்களூரில் ஜேபி நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 5 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று நுழைந்தது. தண்ணீர் பம்பு வழியாக 5 ஆவது மாடி வரை சென்ற அந்த பாம்பு ஒருவரின் வீட்டின் வெஸ்டர்ன் டாய்லெட்டுக்குள் சென்று தஞ்சம் அடைந்தது. மறுநாள் காலை வழக்கம் போல் பாத்ரூம் சென்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பார்த்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

பாம்பை கண்டு அஞ்சிய அந்த நபர், இறுதியாக துணிச்சலாக பாம்பை பிடிக்க களத்தில் இறங்கினார். கஷ்டப்பட்டு ஒருவழியாக பாம்பை பிடித்து தீயணைப்பு காவலரிடம் ஒப்படைத்தார். இந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral video today cobra curled up inside toilet bowl

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X