viral video trending : மெடிக்கல் ஷாப்பில் கூட்டமாக திருட சென்ற திருடர்களில் ஒருவன், அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் போல் கட்டிப்பிடி முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் அதிகம் ரசிக்கப்பட்டுள்ளது.
Advertisment
பிரேசில் நாட்டில் பரப்பரப்பாக இயங்கி வரும் மெடிக்கல் ஷாப்பில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கடையின் உரிமையாளர்கள் மற்றும் கடையில் நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களை மிரட்டி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.
அப்போது அந்த கடைக்கு மருந்து வாங்க வந்திருந்த மூதாட்டி திருடர்களை பார்த்து பதற்றம் அடைந்தார். திருடர்கள் அனைவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். பொதுமக்களிடம் இருந்தும் பணத்தை பிடிங்கிய திருடர்களை பார்த்து அந்த மூதாட்டி பயத்தில் தன்னிடம் இருந்த பணத்தையும் திருடன் இடம் கொடுத்தார்.
அதற்கு அந்த திருடன் பணத்தை பெறாமல், பதிலுக்கு அந்த மூதாட்டியிடம் பயப்படாதீர்கள் என தோளில் தட்டி அவரின் நெற்றில் முத்தம் இடுகறான். பின்பு அங்கிருந்து மின்னல் வேகத்தில் திருடர்கள் அனைவரும் மாயம் ஆகிறார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
வீடியோவை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தை பார்த்து வியப்படைந்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.