புது மனைவியை ஜேசிபியில் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்!

கல்யாணம் முடிந்த முதன்முறையாக தனது கணவனுடன் வீட்டிற்கு செல்ல காத்திருக்கும் பெண்

கர்நாடகாவில் தனது புதுமனைவியை வேலை செய்யும் ஜேசிபி வாகனத்தில் வைத்தே ஊர்வலம் அழைத்து சென்ற கணவர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

பொதுவாக திருமணம் முடிந்த உடன், மணமக்களின் ஊர்வலம் என்பது கூடி இருக்கும் உறவினர்களுக்கு மட்டுமில்லை மணமக்களே ஒரு மறக்க முடியாத தருணம் தான். காரணம், கல்யாணம் முடிந்த முதன்முறையாக தனது கணவனுடன் வீட்டிற்கு செல்ல காத்திருக்கும் பெண் எப்படி வந்து இறங்குகிறாள் என்பதை பார்க்க பலரும் காத்துக் கொண்டு இருப்பார்கள்.

இந்த தருணத்தை தனது மனைவிக்கு மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நினைத்த கர்நாடகாவை சேர்ந்த சேத்தன் என்ற இளைஞன் 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறார். அப்படி அவர் செய்த செயல் என்ன தெரியுமா?

சேத்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா என்ற பெண்ணுக்கு 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவர்களது திருமணத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வியந்துள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் மணமக்களை அழைத்து செல்ல பூவினால் அலங்கரிக்கப்பட்ட காரை குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை சேத்தனோ புது மனைவியை காரில் அழைத்துச்செல்ல மறுத்துள்ளார்.

அதே சமயம், சேத்தன் ஜேசிபி வாகன ஓட்டுநர் என்பதால் அவரது திருமண ஊர்வலத்தையும் ஜேசிபி வாகனத்திலேயே நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்பு, புதுபெண் மம்தா கணவனின் ஆசைக்கு ஓகே சொல்ல அடுத்தது என்ன ஜேசிபி வாகனத்தில் மணமக்கள் ஊர்வலம் தான். இந்த காட்சியை ஊரில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் வேடிக்கை பார்த்து ரசித்துள்ளனர். இந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுக்குறித்து பேசிய மணமகன் சேத்தன். “ எங்கள் குடும்பத்துக்கு சோறு போடும் ஜேசிபி வாகனத்திலியே என் மனைவியை முதன்முறையாக அழைத்து சென்றது எனக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close