பேரலை ஒன்றும் பெரிதல்ல... ரிப்போர்ட்டர்ஸ் வாழ்க்கை! (வீடியோ)

பத்திரிக்கையாளர் என்றால் அவர்களது வாழ்க்கை ரொம்ப ஈஸியா இருக்கும், அவங்க சினிமா பிரபலங்களோடு ஜாலியா செல்ஃபி எடுத்துட்டு செம்மயா இருப்பாங்க அப்டீன்னு நீங்க நினைக்குறீங்களா? ம்ம்.. நீங்க நினைப்பது கரெக்ட் தான். சில நேரங்களில் அப்படி தான் இருப்பாங்க.

ஆனாலும், பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கை என்பது கொஞ்சம் ரிஸ்கானது தான். இயற்கையின் சீற்றங்களுக்கு இடையே இருந்து கொண்டு மக்களுக்கு செய்தி வழங்குவதை நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்ட சம்பத்தின் கதையை சொல்கிறது இந்த வைரல் விடியோ.

அந்த விடியோவில் செய்தியாளர் ஒருவர் கடலின் முன் நின்று, மைக்கை பிடித்துக்கொண்டு செய்தி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரின் பின்னால் வரும் ஒர் பேரலை அவரை தாக்குகிறது. அந்த பேரலை வந்து அவரை தாக்கியதும், சிறிது தடுமாறும் அவர் பின்னர் தொடர்ந்து செய்தியை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்சீற்றத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் பரிதவிக்கும் நிலையும் அவர் சுட்டிக்காட்டியதால் என்னவோ, அந்த பேரலை அவரை தாக்கியது போல தெரிகிறது!

×Close
×Close