முட்டைகோஸில் மறைந்திருந்த குட்டிப்பாம்பு... சமைத்துச் சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதி!

காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தும் முன்னர் அவற்றை நன்கு பார்த்துவிட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

முட்டைகோஸில் மறைந்திருந்த குட்டிப்பாம்பை, கவனிக்காமல் சமைத்து சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் இந்தூரில் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு உணவு தயார் செய்திருக்கிறார். அதற்கான அவர் முட்டைகோஸை பயன்படுத்தி, சமையல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த உணவை தயார் செய்துவிட்டு, தாயும், மகளும் போதுமான அளவு சாப்பிட்டு விட்டனர். அப்போது தான் உணவில் குட்டிப் பாம்பின் உடல் தென்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மருத்துவனைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு பாம்பு விஷத்தால் ஏதேனனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, விஷமானது ரத்தத்துடன் கலந்து விட்டால் மிகவும் ஆபத்தானது. எனவே, அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க, அவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தும் முன்னர் அவற்றை நன்கு பார்த்துவிட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close