Advertisment

தாத்தாவோடு சேர்ந்து பட்டம் பெற்ற பேத்தி - இணையத்தில் குவியும் வாழ்த்து மழை

வயோதிகம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பட்டம் பெற்று அசத்தியுள்ளார் நெய்ரா.

author-image
WebDesk
New Update
தாத்தாவோடு சேர்ந்து பட்டம் பெற்ற பேத்தி - இணையத்தில் குவியும் வாழ்த்து மழை

Woman graduates on the same day as her 87-year-old grandfather : நினைத்ததை படிக்க, செய்ய வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். தன்னுடைய 60 - 70களிலும் மக்கள் தங்களுக்கு விரும்பியதை அடிக்கடி செய்து அது வைரலாகும் போது காலம் அனைத்திற்கும் வழி காட்டும் என்ற நம்பிக்கையே பிறக்கும்.

Advertisment

87 வயதான ரேனா நெய்ரா பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்ததோடு தன்னுடைய பேத்தியுடன் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார். வயோதிகம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பட்டம் பெற்று அசத்தியுள்ளார் நெய்ரா.

அவர் படித்த UTSA கல்லூரியில் அவருடைய பேத்தி பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படித்து பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக UTSA கல்வி நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவர்களின் புகைப்படங்களை பதிவு செய்து "Family Goals" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்ற நிலையில் சிட்டிசன்கள் தங்களின் வாழ்த்தை பதிவு செய்து வருகின்றனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் மக்கள் பிரதிநிதி டியாகோ பெர்னால், புகைப்படக் கலைஞர் ரோணால்டோ கோம்ஸ், செனேட்டர் ஜோஸ் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.

நெய்ரா மேரிஸ் பல்கலைக்கழத்தில் 1950களில் படிக்க சென்றுள்ளார். ஆனால் திருமணமான பிறகு அவர் மேற்கொண்டு தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர இயலவில்லை. தன்னுடைய மனைவி சமீபத்தில் மறைந்த நிலையில், இடை நின்ற கல்வியை மீண்டும் தொடரும் முயற்சியாக UTSA-வில் இணைந்து படிக்க துவங்கியுள்ளார். 2016ம் ஆண்டு அவர் இந்த கல்லூரியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment