பாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா? பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்!

ஒரு குடும்பத்தில் இவ்வளவு பெரிய களேபரம்

பாம்பு போல் தோற்றமளிக்கக் கூடிய லெக்கின்ஸ் அணிந்திருந்த மனைவியின் கால்களை, உண்மை பாம்பு என நினைத்து கணவர் அடித்து நொறுக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பு லெக்கின்ஸ்:

இன்றைய பெண்களை அதிகமாக கவர்ந்திருக்கும் ஆடையில் லெக்கின்ஸூம் ஒன்று.பெரும்பாலான பெண்கள் லெக்கின்ஸை விரும்பி அணிக்கின்றனர். ஆரம்பத்தில் ப்ளெயினாக வந்த இந்த லெக்கின்ஸ்கள் தற்போது விதவிதமான டிசைன்களில் வருகின்றன. அதில் ஒன்று தான் இந்த ஸ்நேக் லெக்கின்ஸ் மாடல்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக பாம்பு போலவே இருக்கும் இந்த லெக்கின்ஸால் பெண் ஒருவரின் கால், சொந்த கணவராலே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கணவருக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க நினைத்த அந்த பெண்ணுக்கு, கடைசியில் கிடைத்தது பரிசு இதுதான். ஸ்நேக் லெக்கின்ஸை அணிந்துக் கொண்டு பெண் ஒருவர் தனது அறையில் படுத்து உறங்கினார்.வேலை முடிந்தது வீடு திரும்பிய அந்த கணவர் மனைவியின் அறைக்கு சென்றார். அங்கு அவர் கண்ணில் பட்ட காட்சி இதுதான்.

இரண்டு கருநாக பாம்புகள் அவர் மனைவியின் அருகில் தலையை காட்டிய படி படுத்துக் கொண்டிருக்கிறது. பதறிப் போன அவர், உடனே அருகில் இருந்த பேஸ்பால் பேட்டை எடுத்து பாம்புகளை அடிப்பதாக எண்ணி மனைவியின் கால்களை அடித்து நொறுக்கிறார்.

பாம்பு லெக்கின்ஸ்

பாம்பு லெக்கின்ஸ்

வலியால் அலறித் துடித்த மனைவியிடம் “பயப்படாதே உன்னை நான் காப்பற்றுகிறேன். பாம்புகள் செத்து விடும்” என கூறி மீண்டும் மீண்டும் அவரின் காலை பேஸ்பால் பேட்டால் பதம் பார்த்து விட்டார்.  ரத்தம் சொட்டிய நிலையில் அந்த பெண் பாம்பு இல்லை என் கால்கள் தான் என விவரிக்க துடிதுடித்த அவர், உடனே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு லெக்கின்ஸால் ஒரு குடும்பத்தில் இவ்வளவு பெரிய களேபரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close