உலகின் மிக உயரமான மற்றும் குள்ளமான பெண்கள் லண்டனில் ஒரு கப் டீ குடிப்பதற்காக சந்தித்தனர். மனதைக் கவரும் இந்த நிகழ்வின் வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
உலகின் மிக உயரமான மற்றும் குள்ளமான 2 பெண்கள் லண்டனில் சந்தித்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ருமேசா கெல்கி மற்றும் ஜோதி ஆம்கே ஆகிய 2 பெண்கள் கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடினர். கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இந்த 2 பெண்களும் லண்டனில் சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் மிக குள்ளமான பெண் ஜோதி அம்கேவும் 2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஹோட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உயரம் உள்ளார். 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) மிகவும் குள்ளமான 30 வயதான இந்திய நடிகர் ஜோதி அம்கேவும் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் சந்தித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இருவரும் மேக்கப், சுய பாதுகாப்பு மற்றும் நெயில் ஆர்ட் உள்ளிட்ட பகிரப்பட்ட ஆர்வங்களில் இணைந்தனர்.
“ஜோதியை முதன்முதலில் சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது” என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திடம் ருமேசா கூறினார்,
“அவர் மிகவும் அழகான பெண்மணி. நான் அவளை சந்திக்க நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.”
“எங்கள் உயர வித்தியாசம் காரணமாக சில நேரங்களில் கண்ணைப் பார்த்து பேசுவது என்பது எங்களுக்கு கடினமாக இருந்தது, ஆனால் அது நன்றாக இருந்தது” என்று ருமேசா கூறினார்.
ஜோதி கூறுகையில், “என்னை விட உயரமானவர்களை நான் மேலே பார்க்க வேண்டும், அப்படி பார்க்க பழகிவிட்டேன்.” என்று கூறினார்.
உலகின் மிக உயரமான மற்றும் குள்ளமான பெண்கள் லண்டனில் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.