மகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா!

வேறு யாரு பயிற்சி கொடுத்து இருக்க போறா?

முன்னாள் கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனி  தீவிர உடற்பயிற்சியில் ஈடுப்பட்டியிருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜிவா வீடியோ:

தோனியின் மகள் ஜிவாவுக்கு  சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பல நேரங்களில் தோனியின் வீடியோவை விட  ஜிவாவின் க்யூட் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று   உள்ளனர்.

தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதை விட  ஜிவா தோனிக்கும், கிராஸியாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்.  சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு தனியாக ஃபேன்ஸ்  பேட்ச் கூட  இருக்கிறது.

ஜிவா தோனி பற்றி கேட்கவே வேண்டாம்.   ஜிவா பாடுவது, ஆடுவது, சமைப்பது, மொறைப்பது, அழுவது, பேசுவது என  என்ன செய்தாலும் அவ்வளவு க்யூட்டாக இருக்கும். உடனே, ரசிகர்கள் அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி விடுவார்கள்.

தனது தந்தைக்கு  சோஷியல் மீடியாவில் கடுமையாக  போட்டி கொடுப்பவர் ஜிவா தான். இந்நிலையில் தற்போது ஜிவாவின்  மற்றொரு வீடியோ  ஒன்று லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஜிவா தோனி, ஸிவா பிளாங்க்‌ஸ் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார்.  பல்வேறு கடிமான பயிற்சிகளுக்கு பிறகு  செய்யப்படும் இந்த உடற்பயிற்சியை ஜிவா தோனி அசால்ட்டாக செய்வது பார்ப்பவர்களையும் திகைக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை  ஜிவாவின் தாயும், தோனியின் காதல் மனைவியுமான சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அதே போல் இந்த வீடியோவில் தன்னை விட ஜிவா இந்த உடற்பயிற்சியை சூப்பராக  செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த தோனி ரசிகர்கள் வழக்கம் போல்   ”வேறு யாரு பயிற்சி கொடுத்து இருக்க போறா? நம்மதல தோனித்தான் “  என்று  கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றன. கூடவே வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close