ஹேர் டை போடுறீங்களா? அப்போ இதைப் தெரிஞ்சிக்கோங்க

முடி நரைப்பு காரணங்கள்

தவறான உணவுப் பழக்கம், வைட்டமின் குறைபாடு, மன அழுத்தம், மாசுபாடு காரணமாக இளம் வயதிலும் நரை ஏற்பட்டுவிடுகிறது.

பொதுவான தீர்வு - ஹேர் டை

நரையை மறைக்க ஹேர் டை சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த டை பாதுகாப்பானது என்பது தெளிவில்லாமல் குழப்பம் ஏற்படுகிறது.

ஆபத்தான ரசாயனங்கள்

சில ஹேர் டைகளில் அமோனியா, பெராக்ஸைட், ரெஸ்கார்சினால் போன்ற ஹானி கெமிக்கல்கள் இருப்பதால், தோல் பிரச்சனை, சுவாச கோளாறு, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும்.

ஆலர்ஜி சோதனை அவசியம்

ஹேர் டை பயன்படுத்தும் முன் சிறிய பகுதியில் தடவி ஒவ்வாமை உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஹேர் டை தவிர்க்க வேண்டும்.

இயற்கை ஹேர் டைகள்

கெமிக்கல் இல்லாத, மூலிகை சார்ந்த ஹேர் டைகள் பாதுகாப்பானவையாகும். அவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

அமோனியா/பிபிடி ஃப்ரீ டைகள்

"அம்மோனியா - ஃப்ரீ ", "பிபிடி-ஃப்ரீ " என்று குறிப்பிடப்பட்ட டைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

பயன்பாட்டு நேரம் முக்கியம்

பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட ஹேர் டையை அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது; முகம், கண்கள், உச்சந்தலையில் டை படுவதை தவிர்க்க வேண்டும்.

பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை

அரிப்பு, சிவப்பு, வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இருந்தால் டை பயன்படுத்துவதை நிறுத்தி, மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் அறிய