நரைக்கு இனி குட்பை... இந்த பவுடர் போதும்!

நரைமுடியை மறைக்க இயற்கையான தீர்வாக கோகோ பவுடர் பயன்படுத்தலாம்.

இது வழக்கமான ஹேர் டை போல நீண்டநாள் நிறத்தை தராதிருந்தாலும், பக்கவிளைவுகளும், முடி உதிர்தலும் ஏற்படுவதில்லை.

பொதுவாக சாக்லேட் அல்லது பானங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோகோ பவுடர், நரைமுடிக்கான தீர்வாக பலருக்குத் தெரியாத வகையில் பயன்படுகிறது.

இளம் வயதில் நரைமுடி தோன்றுவதற்கு மரபணு, மனஅழுத்தம், புகை, மதுபானம், மாசுபட்ட நீர் போன்றவை காரணமாக இருக்கலாம்.

ரசாயன சாயங்களுக்கு மாற்றாக இயற்கை விரும்பும்வர்களுக்கு கோகோ பவுடர் ஒரு நலமான தீர்வாக இருக்கலாம்.

கோகோ பவுடரை தலைமுடிக்கு பயன்படுத்துவது எப்படி?

கோகோ பவுடரில் சிறிது தயிரை கலந்து, அதை பேஸ்ட் போல ஆக்கி அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் காயவிடவேண்டும்.

பின்னர் சாதாரண தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும். முடியை அலசும்போது ஷாம்புவை பயன்படுத்தக் கூடாது.

வாரம் ஒருமுறை இந்த கோகோ ஹேர் மாஸ்க் நரைமுடி சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கோகோ பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்ந்து கலக்கி ஒரு கலவையாக தயார் செய்து தலைமுடிக்கு மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.

இது தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடிகள் வளரவும், முடியின் நிறம் மாறவும் ஊக்கம் அளிக்கிறது.

காபி நிறமாக மாறும்...

கோகோ பவுடரை வெந்நீரில் கலந்து, குடிக்காமல் குளிக்கும் போது தலைமுடிக்கு தேய்க்க வேண்டும். இதனால் நரைமுடிகள் காபி நிறமாக மாறும்.

பக்கவிளைவுகள் இல்லை

மேலும் கருமை விரும்பினால் சிறிது காபி தூளையும் சேர்க்கலாம். கோகோ பவுடர் ரசாயனமில்லாததால் பாதுகாப்பாக, பக்கவிளைவுகள் இல்லாமல் பயன்படுத்தலாம்.

மேலும் அறிய