இளநரை பிரச்சனை? கரு கரு கூந்தலுக்கு மேஜிக் ஆயில்!

விளக்கெண்ணை மசாஜ்

இரவு தூங்கும்போது சிறிதளவு விளக்கெண்ணையை தலைக்கு தடவி தூங்குவது, டென்ஷன் குறைக்கும் மற்றும் உடல் குளிர்ச்சி பெற உதவுகிறது.

கரிசலாங்கண்ணி எண்ணை

இந்த எண்ணையை பயன்படுத்துவதால் முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் குறையும்.

கறிவேப்பிலை + தேங்காய் எண்ணை

இரண்டு கைப்பிடி கறிவேப்பிலையை தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்ப்பதால் இளநரை வராமல் தடுக்கும்.

எலுமிச்சை சாறு தடவுதல்

எலுமிச்சை சாற்றை தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் பொடுகு குறையும்.

அளவான உணவு பழக்கம்

சத்தான, இரும்புசத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் முடி கருமையாக வளரும்.

இயற்கை வழியில் கூந்தல் பராமரிப்பு

ப்ளீச்சிங், ஸ்ட்ரெயிட்டனிங் போன்ற செய்முறை அழகுபடுத்தல் தவிர்த்து இயற்கை முறையை பின்பற்ற வேண்டும்.

தோய்ந்த எண்ணை மசாஜ்

சுட வைத்த தேங்காய் எண்ணையை பொறுக்கும் சூட்டில் தலைக்கு தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

ஹேர் டிரையர் தவிர்க்க வேண்டும்

ஹேர் டிரையர் அதிகம் உபயோகித்தால் முடி உதிர்வது அதிகரிக்கும்.

வாரந்தோறும் சீயக்காய் குளியல்

தரமான சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி வாரத்துக்கு ஒருமுறை தலைமுடியை கழுவ வேண்டும்.

முடி நுனி வெட்டுதல்

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முடி நுனியை வெட்டினால், பிளவுபட்ட முடி நீங்கி செழிப்பாக வளரும்.

மேலும் அறிய