விஷேசத்திற்கு போறீங்களா? வீட்டிலே கைகளை பளபளப்பாக்கலாம்!

மெனிக்யூர் என்றால் என்ன?

மெனிக்யூர் என்பது நகங்களை அழகாகவும், கைகளை ஆரோக்கியமாகவும் பராமரிக்கும் செயல். இதில் நகங்களை வெட்டுதல், சுத்தம் செய்தல் மற்றும் கைகளுக்கு மசாஜ் செய்வது அடங்கும்.

கைகளை சுத்தம் செய்தல்

மெனிக்யூருக்கு முன் கைகளை சோப்பில் நன்கு கழுவி சுத்தமாக்க வேண்டும்.

பழைய நெயில் பாலிஷ் நீக்குதல்

நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி பழைய பாலிஷ்களை மென்மையாக அகற்ற வேண்டும்.

நகங்களை வெட்டுதல் மற்றும் ஃபைல் செய்தல்

நகங்களை விருப்பமான வடிவில் வெட்டி, ஒரு திசையில் ஃபைலர் கொண்டு மென்மையாக வடிவமைக்க வேண்டும்.

நக மசாஜ்

ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணையுடன் எஸன்ஷியல் ஆயிலை சேர்த்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

கைகள் ஊறவைக்குதல்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, கைகளை 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

ஸ்கிரப் செய்தல்

சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணையை கலந்து விரல்களில் மெதுவாக தேய்த்து இறந்த செல்களை நீக்கலாம்.

மாய்ஸ்சரைசிங்

கைகளை துடைத்த பின், நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி கைகளையும் நகங்களையும் ஈரப்பதம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும்.

நகங்களை அழகுபடுத்தல்

நெயில் பாலிஷ் பயன்படுத்தி நகங்களை விருப்பமான நிறத்தில் அழகுபடுத்தலாம்.

ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும்

மெனிக்யூர் மூலம் நகங்கள் வலுவாகவும், கைகள் மென்மையாகவும் இருக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தொற்றுகளைத் தவிர்க்க உதவுகிறது.

மேலும் அறிய